மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில், திடீரென டாடா சன்ஸ் நிறுவனமும் குதித்துள்ளது. தனது விருப்பத்தை அந்நிறுவனம் பிசிசிஐ அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.

சீனாவின் வீவோ நிறுவனம் விலகியதையடுத்து, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் யார் என்பதில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தமுறை டைட்டில் ஸ்பான்சர் வாய்ப்பை பெறவுள்ள இந்திய நிறுவனமானது, இதற்கு முன்னர் பிசிசிஐ அமைப்புடன் பெரியளவில் எந்தத் தொடர்பும் வைத்திராத ஒன்றாகத்தான் இருக்கும் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

அந்தவகையில், டாடா சன்ஸ் நிறுவனம் களத்தில் குதித்துள்ளதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.‍ மேலும், டைட்டில் ஸ்பான்சரை பெறுகின்ற நிறுவனத்தின் மீது கடந்த காலத்தில் எந்தவித முறைகேட்டுப் புகாரும் இருக்கக்கூடாது என்ற பிசிசிஐ அமைப்பின் விருப்பத்திற்கும், இந்த டாடா சன்ஸ் நிறுவனம் பொருத்தமானது என்று கூறப்படுகிறது.

டாடா சன்ஸ் தவிர, அன்அகடமி, பதஞ்சலி, பைஜூ’ஸ் மற்றும் ட்ரீம்11 ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே களத்தில் குதித்துள்ளன.