உலகின் நல்ல நெறிமுறைகளைப் (ethics) பின்பற்றும் நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல்  நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்க சிந்தனைக் குழுவான எதிஸ்பியர்(Ethisphere) நிறுவனம் வெளியிட்ட உயரிய நெறிமுறைகளைப் பின்பற்றும் உலகின் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டாடா ஸ்டீல், விப்ரோ ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள், இடம் பெற்றுள்ளன. மொத்தம் 124 கம்பெனிகள் கொண்ட பட்டியலில், இந்தியாவிலிருந்து இரண்டு கம்பெனிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
எதிஸ்பியர் , உலகம் முழுவதும், சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தைச் சமுதாயத்தில் தங்கள் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்களைத் தொடர்ந்து கவுரவித்து வருகின்றது. சில நிறுவன்ங்கள் தொடர்ந்து 13 ஆண்டுகளாய் பட்டியலில் இடம்பிடித்து வருகின்றன. இந்த முறை புதிதாக 8 நிறுவன்ங்கள் இடம் பெற்றுள்ளன.

1907ல் துவங்கப்பட்டது டாடாஸ்டீல் நிறுவனம். 109 ஆண்டுகளாய் இரும்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.
கிட்டத்தட்ட 80,000 ஊழியர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் தலைமைப் பொருப்பில் தமிழர்களான நடராஜன் சந்திரசேகரன் (சேர்மன்) மற்றும் டி.வி. நரேந்திரன் (எம்.டி) ஆகியோர் உள்ளனர்.

சந்திரசேகரன்
ஆசிம் பிரேம்ஜி


அதே போல் விப்ரோ நிறுவனம் 1945ல் முகமது ஹசம் பிரேம்ஜி யால் துவங்கப்பட்டது. தறபோது ஆசிம் பிரேம்ஜி மற்றும் அபிடாலி நீமுச்வாலா ஆகியோர் முக்கியப் பொருப்பில் உள்ளனர். இதில் 173863 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த இரு நிறுவனமும் தங்கள் நன்னெறி நடவடிக்கைகளின் மூலம் தங்கள் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள் மற்றும் அந்நிய வாடிக்கையாளர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் எடுக்கும் முக்கிய முடிவுகளை ஒருமைப்பாடு கலாச்சாரத்தைப் பின்பற்றி எடுத்துவருகின்றன என எதிஸ்பியர் நிறுவனம் பாராட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில், இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே எய்டம்பெற்றுள்ளன. அவற்ரில் ஒன்றாக விப்ரோ இடம் பெற்றுள்ளது. பட்டியலில் உள்ள மற்றொன்று, ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் ஆகும்.

அதேபோல், உலோகங்கள், கனிமங்கள் மற்றும் சுரங்க துறையில் இரு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றாக டாடா ஸ்டீல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ஷீனிட்ஸெர் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் இன்க் இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்றொரு நிறுவனம் ஆகும்.
124 நிறுவனங்களில் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 98 நிறுவனங்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன.
2017 ஆம் ஆண்டில், ஐந்து கண்டங்களிலிருந்து , 19 நாடுகள் மற்றும் 52 தொழில் பிரிவுகளில் 124 பட்டங்கள் அளிக்கப்பட்டன.
இதற்கிடையில், தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மிக நன்னெறி முறைகளைப் பின்பற்றும் (ethical) நிறுவனங்களுள் ஒன்றாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் பட்டத்தை வென்றுள்ளது.