தட்கலில் விவசாய மின் இணைப்பு: செப்டம்பர் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கல் முறையில் இணைப்பு பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இது தவிர, சாதாரண வரிசை முன்னுரிமையில் 2003ம் ஆண்டு மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளும், 2003ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2004ம் ஆண்டு மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட்ட 1000 விண்ணப்பங்களுக்கு திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ், இலவச விவசாய மின் இணைப்பு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.