தட்கல் ரெயில் டிக்கெட் முறைகேடு: 60 ஏஜெண்டுகள் கைது

சென்னை:

மிழகத்தில் தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகள் எடுப்பதில் முறைகேடாக ஈடுபட்ட 60 ஏஜண்டுகளை காவல்துறையினர் கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில்,  சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடு செய்து வந்தது தெரிய  வந்துள்ளது.

ரயில் பயணிகள் அவசர தேவைக்கா ரயில் டிக்கெட்  பதிவு செய்ய தட்கல் முறையை ரயில்வே வாரியத் அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் டிக்கெட் பதிவு செய்ய கட்டணம் அதிகம். இருந்தாலும், இந்த முறையில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்பதால், தட்கல் முறையை ஏராளமானோர் விரும்பி டிக்கெட் பதிவு செய்கின்றனர்.

ஆனால், சமீப காலமாக பொதுமக்கள் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்தால், அவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ரெயில் நிலைய கவுண்டர்களில் காத்திருக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

பெரும்பாலான டிக்கெட்டுகளை ஏஜண்டுகள் பதிவு செய்து விடுவதால் சாதாரண மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.. இது தொடர்பாக ரயில்வே ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில், ரயில்வே போலீசார் ஏஜண்டுகளிடம் திடீர் சோதனை நடத்தினார்.

இதில், பல ஏஜண்டுகள், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்.,  எம்.ஏ.சி., ஜாக்குவார் போன்ற சட்டவிரோத மென்பொருளை  பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.

இதைக் ணட் போலீசார், அந்த மென்பொருளையும், கணினியையும் கைப்பற்றி நடவடிக்கை எடுத்தனர்.  இதுவரை முறைகேடாக பைரசி மென்பொருள் மூலம் டிக்கெட் பதிவு செய்து வந்த பல்வேறு ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இந்த ஏஜண்டுகள், பைரசி மென்பொருள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து உள்ளது தெரிய வந்துள்ளது.  இதன் காரணமாக இனிமேல் பொதுமக்களுக்கு எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று   ரெயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.