‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.

‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ஏற்கெனவே மணமானவர்.

நடிகை ராதிகா ஆப்தேவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவரது கணவர் பெனிடிக் டெய்லரின் ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘பி’ என்பதை தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிகவும் சின்னதாக பச்சை குத்தியுள்ளார். இப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.