தீபிகா படுகோனே-வின் ‘சப்பாக்’ திரைப்படத்துக்கு புதுச்சேரியிலும் வரிவிலக்கு!

புதுச்சேரி:

தீபிகா படுகோனே-வின் ‘சப்பாக்’ திரைப்படத்துக்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு வலிவிலக்கு அளித்துள்ள நிலையில், தற்போது  புதுச்சேரி மாநில அரசும்  வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்து உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன, சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆதரவு நல்கினார். இதை, பாஜக அரசியலாக்கியது. தீபிகா படுகோனே, தற்போது நடித்து வெளியாக உள்ள சப்பாக் படத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே, மாணவர்களுடன் சந்திப்பு நடத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று ரிலிசாகும் சப்பாக் படத்துக்கு படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர்  மாநில அரசுகள் அறிவித்திருந்தன. அதைத்தொடர்ந்து, தற்போத புதுச்சேரி மாநில அரசும் வரி விலக்கு அளிப்பதாக அறிவித்து உள்ளது.