டில்லி

ங்கியில் இருந்து வருடத்துக்கு ரூ. 10 லட்சம் பணம் எடுத்தால் வரி விதிக்க அரசு உத்தேசித்துள்ளது.

அரசு நேரடி பண பரிவர்த்தனையை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. உதாரணமாக அனைத்து பண பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. ரூ.5,00,000 க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் செய்யும் தனி மனிதர்களை கண்காணிக்க இந்த உத்தரவு இடப்பட்டுளதாக தெரிய வந்துள்ளது.

ஆயினும் மற்றொருவர் ஆதார் எண்ணை இணைத்து பல ரொக்க பரிவர்த்தனைகள் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் ரூ. 5 லட்சத்துக்கு குறைவாக வங்கையில் இருந்து பணம் எடுப்பவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்பதால் பலரும் இதற்கு குறைவான பண பரிவர்த்தனைகளை செய்து வந்துள்ளனர். இதையும் த்டுக்க அரசு முடிவு செய்தது.

இதை ஒட்டி அரசு ஆய்வு செய்ததில் பெரும்பாலான மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்க பணம் தேவை இல்லாத நிலையில் உள்ளதாக் அதெரிய வந்துள்ளது. எனவே மத்திய அரசு இனி வருடத்துக்கு ரூ.10 லட்சம் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் மக்களுக்கு கூடுதல் வரி வசூலிக்க உத்தேசித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் செய்யப்படலாம் எனவும் அரசு இந்த பண பரிவர்த்தனைகளை சுலபமாக கண்காணிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.