திருச்சி:
ரடங்கில் இருந்து டாக்சி, கால்டாக்சி உள்பட அனைத்து வகையான  வாகனங்கள் இயக்க அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுபோல ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 மாதமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தங்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து லோன் மூலம் எடுக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தவணை கட்டப்பட முடியாத நிலையில்,  மேலும்  ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தவணை கட்டுவதில் இருந்து ள் விலக்கு அளிக்க வேண்டும்,
ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்கவும் 3 மாதம் அவகாசம் வேண்டும் உள்பட கால்டாக்கி டிரைவர்கள் உள்பட  ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சுமார்  50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிய நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் ஆட்டோ ஓட்டுநர்கள்  மறியலில் ஈடுபட்டனர். அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் வலியுறத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், ஆட்டோ ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு இன்று காலை  திரண்டு வந்தனர்.
அப்போது திடீரென ஆட்சியரகம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
நேற்று சென்னை கிண்டி மேம்பாலம் பகுதியில் கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.