மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆளெடுப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் காலாண்டில் 12,356 பணியாளர்களை ஒட்டுமொத்த அளவில் சேர்த்துள்ளது டிசிஎஸ். இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகம். சுமார் 30000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு(புதிதாக படிப்பை முடித்தவர்கள்) சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 30000 பேரில், 40% பேர், முதல் காலாண்டில் பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ளோர் இரண்டாவது காலாண்டில் பணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‍மொத்த ஊழியர்களின் தொகுக்கப்பட்ட எண்ணிக்கை 436641 என்ற அளவில் உயர்ந்துள்ளது. மொத்தம் 149 நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். 40000 ஊழியர்கள் என்ற நிலையில், அமெரிக்காவிலேயே அதிகளவு பணி வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுள் ஒன்று என்ற பெயரை பெற்றுள்ளது டிசிஎஸ்.