புது டெல்லி:
ந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை தலைகீழாக மாறியுள்ளது.

இதுகுறித்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி எம்.டி.யுமான ராஜேஷ் கோபிநாதன் தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக எங்கள் நிறுவனத்தின் பணி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும், எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம். ஆனாலும், இந்த முறை எந்த சம்பள உயர்வையும் வழங்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

இருந்த போதிலும் இந்த ஆண்டு வழங்கப்படும் அனைத்து வளாக சலுகைகளையும் டி.சி.எஸ் வழங்கும். இந்த ஆண்டு 40,000 வளாக சலுகைகள் வழங்கப்பட்டதாக ஈ.சி.பி மற்றும் டி.சி.எஸ் இன் மனித வள மேம்பாடு துறை அதிகாரி மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி ஊழியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படும் என்றும், ஆனால் குவாண்டம் வணிக செயல்திறனைப் பொறுத்தது மற்றும் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் மிலிந்த் கூறினார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் மார்ச் 31, 2020 நிலவரப்படி 4 லட்சத்து 48 ஆயிரத்து 464 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிப்பிடதக்கது.

இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2019-2020 நிதியாண்டுக்கான நிதி வருவாயை நிறுவனம் அறிவித்ததையடுத்டு ஊழியர்களில் சம்பளம் குறித்த இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.  நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த லாபத்தில் 8,049 கோடியாக ரூபாயாக இருந்துடன் 0.9 சதவிதகம் (YOY) சரிவை TCS தெரிவித்துள்ளது.

நிதியாண்டில், டி.சி.எஸ் 7.1% வருவாய் வளர்ச்சியை ரூ .1,56,949 கோடியாக நிலையான நடப்பு அடிப்படையில் கண்டறிந்துள்ளது. இந்த ஆண்டின் நிகர லாபம் ரூ .32,340 கோடியாக இருந்தது, இது 2.8% அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலாண்டின் முதல் பாதியில் எங்கள் மிகப் வளர்ச்சியின் நேர்மறையான வேகத்தை முற்றிலுமாக மாற்றி விட்டது என்று ராஜேஷ் கூறினார்.

மார்ச் 31 நிலவரப்படி, காலாண்டில் விண்ணப்பித்த 210 உட்பட 5,216 காப்புரிமைகளுக்கு டி.சி.எஸ் விண்ணப்பித்தது. மேலும் 1,341 காப்புரிமைகளை பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.