Random image

தெலுங்கானா : எதிரிக் கட்சியான காங்கிரசுடன் இணையும் தெலுங்கு தேசம்

தராபாத்

ரசியலில் இதுவரை எதிரும் புதிருமாக இருந்த காங்கிரசும் தெலுங்கு தேசம்  கட்சியும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.   சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.  தற்போது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை உள்ள நிலையில் முதல்வர் சட்டப்பேரவையை கலைக்கும் தீர்மானத்தை அளித்தார். தற்போது சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட  36 ஆண்டு காலமாக காங்கிரசும் தெலுங்கு தேசம் கட்சியும் எதிரிகளாகவே உள்ளன.    தற்போது இந்த இரு கட்சிகளும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளன.   இது குறித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டியுடன் தெலுங்கு தேச கட்சி தலைவர் ரமணா கலந்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் உத்தம்குமார் ரெட்டி, “தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரின் ஆட்சிக்கு முடிவு கட்ட உள்ளோம் அதற்காக தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளது   எங்கள் கூட்டணி தொடர்பான முதல்கட்ட ஆலோசனைகள் முடிவு பெற்றுள்ளன” என தெரிவித்தார்.