ஆந்திரா : தெலுங்கு தேசம் எம் எல் ஏ மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை

--

விசாகப்பட்டினம்

தெலுங்கு தேச கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவு மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநில விசாகப் பட்டினத்தில் உள்ள தொகுதி அரக்கு.  இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ்.   இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.    இன்று இவர் தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு விட்டு விசாகப்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவருடன் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் சவேரி சோமாவும் மற்றும் சில கட்சிப் பிரமுகர்களும் வந்தனர்.   துமப்ரி குடா என்னும் இடத்தில் உள்ள தூத்தங்கி என்னும் கிராமத்தில் இவர்கள் வந்துக் கொண்டிருந்தனர்.    அப்போது வனப்பகுதியில் இருந்து தீடீரென வெளிப்பட்ட மாவோயிஸ்ப் தீவிர வாதிகள் இவர்களின் வாகனத்ஹ்டை நோக்கி துப்பாக்கி சூடு நிகழ்த்தினர்.

துப்பாக்கி சூட்டில் கிடாரி சர்வேஸ்வர ராவ் அதே இடத்தில் மரணம் அடைந்தார்.    காயம் அடைந்த மற்றவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கபப்ட்டனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி சவேரி சோமா மரணம் அடைந்துள்ளர்.    இந்த தாக்குதலை நேரில் கண்டவர்கள் ஒரு பெண் மாவோயிஸ்ட் இதை முன்னின்று நடத்தியதாக கூறி உள்ளனர்.

இந்த பகுதியில் காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.  ஆந்திர மக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.