விமானபயணம் : தடையை நீக்கக்கோரி எம் பி வழக்கு

தராபாத்

விமான நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட தெலுகு தேசம் எம் பி ஐதராபாத் உச்ச நீதிமன்றத்தில், தடையை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.

அனந்தப்பூர் தொகுதியில் இருந்து தெலுகு தேசம் கட்சியின் சார்பாக தெர்ந்தெடுக்கப்பட்ட எம் பி திவாகர் ரெட்டி.  கடந்த ஜூன் மாதம் திவாகர் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்தார்.  விமான நிலைய விதிகளின்படி, விமானம் கிளம்பும் நேரத்துக்கு 45 நிமிடம் முன்பாக வரவேண்டும்.  ஆனால் எம் பி 28 நிமிடங்கள் முன்னதாக வந்ததால் அவரை செக்-இன் செய்ய அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த திவாகர் ரெட்டி, தன்னை தடுத்த விமானநிலைய ஊழியரை பிடித்துத் தள்ளினார்.  அது மட்டுமின்றி அங்கிருந்த பயணச்சீட்டு பிரிண்டரையும் கீழே தள்ளி உடைத்தார்.  ஆனால் இதுபற்றி கேட்டபோது ரெட்டி தான் ஊழியரை தாக்கவில்லை என்றும், மன்னிப்பு கோரப் போவதில்லை என்றும் பின்னர் தெரிவித்தார்.  இதற்காக இண்டிகோ விமான நிறுவனம் அவருக்கு தங்கள் விமானத்தில் பயணம் செய்ய ஆயுள் கால தடை விதித்தது.  இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் தடை விதித்தன.

தற்போது இந்த தடை சட்டவிரோதமானது என ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் திவாகர் ரெட்டி வழக்கு தொடுத்துள்ளார்.  எனவே தனக்கு விதிக்கப்பட்ட  தடையை உடனடியாக விலக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு சிவசேனா கட்சியின் எம் பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா ஊழியரை தாக்கியதற்காக விமானத்தில் பயணம் புரிய தடை விதிக்கப்பட்டது தெரிந்ததே