டில்லி:

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இன்றும் 2 அவைகளும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில் ராஜ்யசபா மதியம் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தெலுங்கு தேச எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் துணை சபாநாயகர் குரியன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து போராடினர்.

5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சபை காவலர்கள் மூலம் தெலுங்கு தேச எம்.பி.க்கள் வலுக்கட்டாயமாக ராஜ்யசபாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.