Random image

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காபி, டீ விலை உயர்வு!

டில்லி:

யில்களிலும் ரயில்வே நிலையங்களிலும் விற்கப்படும் காபி மற்றும் டீ  போன்றவைகளின் விலைகளை உயர்த்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின்  விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், ரயில்களிலும் டீ, காபி விலை உயர்த்துவதாக அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விலையேற்றம் குறித்து இந்தியன் ரயில்வே அனைத்து வட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனப்பி உள்ளது.

அதன்படி, 170 மி.லி. அளவு காஃபியின் விலை ரூ.7லிருந்து ரூ.10ஆக உயர்த்தப்படும்; 150 மி.லி. டீயின் விலையும் ரூ.7லிருந்து ரூ.10ஆக அதிகரிக்கும். ஆனால், ரெடிமேட் ஸ்டாண்டர்டு டீயின் விலை வழக்கம்போல் ரூ.5ஆகவே இருக்கும் என்றும், இந்த விலை உயர்வு ராஜ்தானி மற்றும் சதாப்தி ஆகியவற்றில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் மாற்றமடையாது என்றும் தெரிவித்து உள்ளது.