சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் அவசியமின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்வாசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில், சென்னையில் இன்று மாலை 6 மணியுடன் தேநீர் கடைகளை மூட சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

பாதுகாப்பு வழிமுறைகளுடன் மளிகை பொருட்கள், காய்கறிகளை மட்டும் டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமைத்த உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.