Random image

குஜராத்: மகாத்மா காந்தி தொடங்கிய கல்வி நிறுவன ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

காந்திநகர்;

குஜராத்தில் மகாத்மா காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மீது பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்,

குஜராத் மாநிலத்தில் வித்யாபத் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பணியாற்றிய தொழிற் பயிற்சி ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். ‘‘இந்த குற்றச்சாட்டில் உண்மை இருந்த காரணத்தால் அந்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்று பல்கலைக்கழக பதிவாளர் ராஜேந்திர கிமானி தெரிவித்துள்ளார்.

வித்யாபத் வளாகத்தில் உள்ள மகதேவ் தேசாயம் சமாஜ்சேவா மகாவித்யாலயாவில் பயிலும் முதுகலை மாணவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியர் மீது புகார் அளித்தார். இந்த மாணவி அங்கு விடுதியில் தங்கி பயின்று வருகிறார். மாணவியை வலுக்கட்டாயமாக தவறான முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

‘‘மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றத்தை ஆசிரியரும் ஒப்புக் கொண்டார்’’ என்று விசாரணை குழு தலைவர் ஆனந்திபடேல் தெரிவித்தார். குஜராத் வித்யாபத் மகாத்மா காந்தியால் 1920ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1953ம் ஆண்டு இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.