மாணவர்களுடன் நடனமாடிய ஆசிரியர் இட மாற்றம் : அமீரகம் அதிரடி

மாதிரி படம்

ஷார்ஜா

ஷார்ஜாவில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் நடனமாடியதால் அல்தாஹிதில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் ஷார்ஜா.  இந்த நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு சில மாணவர்கள் பாடி ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியது.   அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகியது.  இது குறித்து அமீரக அரசின் கல்வித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர், “வைரலான வீடியோவில் கட்டுப்பாடின்றி சில மாணவர்கள் பாடுவதும் ஆடுவதும் பதிவாகி உள்ளது.  அவர்களை கண்டிக்க வேண்டிய ஆசிரியர் அவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதை கண்டுக் கொல்ளவில்லை.   அவர் அந்த மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.   இது சமுதாயத்தை மிகவும் பாதிக்கும் செயலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடனமாடியதாக கூறப்படும் அந்த அசிரியரை ஷார்ஜாவில் இருந்து அல்தாஹித் என்னும் இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.   மேலும் அந்த வீடியோவில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மன்னிப்புக் கடிதம் பெற்றுள்ளது.   அந்த மாணவர்கள் வைத்திருந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.