சென்னை:

மிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என்றும், அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும்  தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் கேள்விக்கு  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும்,  தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்றும்,  பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறி உள்ளது.

மேலும், வருகை பதிவேடு அறிய பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் அரசு பள்ளியில் செயல் படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.