Random image

ஆசிரியர் தினம்: டூடுள் வெளியிட்டு ஆசிாியா்களை பெருமைப்படுத்திய கூகுள்

இன்று நாடு முழுவதும் ஆசிரியா் தினம் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாபெரும் தத்துவ மேதையாக இருந்தார். இவரை கௌரவப்படுத்தும் வகையில், கடந்த 1962ஆம் ஆண்டு முதல் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

doodle

அதன்படி இன்று நாடு முழுவதும் ஆசிரியா் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் சிறந்த ஆசிரியா்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூாி மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிாியா் தினத்தின் போது கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஆசிரியா் தினத்தை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை கொண்டாடுகிறது. இதேபோன்று உலக ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் சொல்லி பெருமைப்படுத்துவோம்.

”அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்”