சென்னை:
ரசுக்கு எதிரான மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே ரத்து செய்திட வேண்டும்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்களைக்கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று குறிபிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் அரசுக்கு எதிரான மனநிலை நிச்சயம் எதிரொலிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.