மக்கள் மது அருந்துவதால்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது : அமைச்சர் அதிரடி

சின்னமூக்கனூர் , வேலூர் மாவட்டம்

க்கள் மது அருந்துவ்தால்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடிகிறது என தமிழக அமைச்சர் வீரமணி கூறி உள்ளார்.

வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் பள்ளித் திறப்பு விழா ஒன்று நடந்தது.   இந்த திறப்பு விழாவில் தமிழக வணிகத்துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துக் கொண்டார்.   அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த ஒருவர் குடிபோதையில் ரகளை செய்துள்ளார்.   காவல்துறையினர் அவரை அப்புறபடுத்தினர்.

அமைச்சரின் கூட்டத்தில் ஒருவர் குடித்து விட்டு ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   விழாவுக்கு வந்திருந்த சிலர் ரகளை செய்தவரை குடிக்க வேண்டாம் என அறிவுரை கூறுமாறு அமைச்சர் வீரமணியை கேடுக் கொண்டுளனர்.  அதற்கு பதில் அளித்து அவர் உரையாற்றி உள்ளார்.

அமைச்சர் வீரமணி தனது உரையில், “மதுபானக் கடைகளை நடத்தும் டாஸ்மாக் வருமானம் எனது துறைக்கு வருகிறது.   அந்த வருமானத்திலிருந்து தான் நாங்கள் புதிய பள்ளிகள் திறக்கிரோம்.  மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் அதில் இருந்து தான் கிடைக்கிறது.

மக்கள் மது அருந்துவதால் தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடிகிறது.   அப்படி இருக்க அவரைப் போன்ற மக்களை மது அருந்த வேண்டாம் என நான் சொன்னால் ஆசிரியர்களுக்கு ஊதியம் எப்படி தருவது?” எனக் கூறி உள்ளார்.  அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.