தெலுங்கானாவில் ஒரே நாளில் 1610 பேருக்கு கொரோனா: 57 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

--

ஐதராபாத்: தெலுங்கானாவில் 1610 தொற்று ஏற்பட ஒட்டுமொத்த பாதிப்பு, 57142 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.

ஆனாலும் கொரோனா பரவல் குறையவில்லை. அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளத. தமிழகத்திலும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இந் நிலையில் தெலுங்கானாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய  மருத்துவ அறிக்கையின் படி தெலுங்கானாவில் 1610 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 9 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் ஒட்டு மொத்த எண்ணிக்கை  57142 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 21-30 வயதிற்குட்பட்ட பெண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. பெண்களில் 7.9 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மொத்தத்தில், அனைத்து வயது ஆண்களிலும் கொரோனா தொற்று கண்டவர்களின் சதவிகிதம் 65.6 என உள்ளது. வாரங்கல் நகர்ப்புறத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.