சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 .

பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

முதல் நாள் ஷூட்டிங்கில் பாடல் காட்சியை படமாக்கினர் படக்குழுவினர். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்ற ருசிகர தகவலையும் பகிர்ந்திருந்தார் ஜிவி பிரகாஷ்.

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கிறார் .

மேலும் Youtube பிரபலம் பிரசாந்த் படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் நடித்த காட்சிகள் பற்றியும், D43 திரை அனுபவம் பற்றியும் பதிவு செய்துள்ளார். வெள்ளித்திரையில் சில படங்களில் கேமியோ அல்லது சிறிய ரோலில் பிரசாந்த் நடித்திருந்தாலும், தனுஷுடன் நடிப்பது இதுவே முதல் முறை. அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தனுஷ் 43 படப் பிடிப்புக்காகப் படக் குழு ஐதராபாத் பறந்துள்ளது. அவர்களுடன் மாளவிகா மோகனும் சென்றிருக்கிறார். தனுஷ், மாளவிகா நடிக்கும் முக்கிய காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் அங்குப் படமாக்கப்படுகிறது. இது 50 நாட்கள் நீண்ட படப்பிடிப்பாக நடக்க உள்ளது. படக்குழு 50 நாட்கள் ஐதராபாத்தில் முகாமிடுகிறது.