Random image

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்

உலக போட்டி ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய வீரர்களின் ஜெர்சி ஹாக்கி விளையாட்டின் தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

Indian-Hockey-team

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தமாக 16 அணிகள் 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இந்தியா சி அணியில் இடம்பெற்றுள்ளது. இதில் முன்னணி ஹாக்கி அணிகளான அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியமும் பங்கேற்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிகாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் ஜெர்சி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் நரேந்திர குமார் வடிவமைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற விழாவில் ஹாக்கி அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ” ஒடிசா மாநிலத்தில் சூரியன் உதயமாகிறது. அது உலகிற்கு ஒளியை தருகிறது. அதுபோன்று இந்த ஆடைகளும் ஹாக்கி அணிக்கு புது உற்சாகத்தையும், அணிக்கு உத்வேகத்தையும், நேர்மறையான எண்ணங்களையும் அளிக்கும் “ என அதனை வடிவமைத்த குமார் கூறினார்.

ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் பேசுகையில், “ புதிய ஜெர்சி எங்களுக்கு உற்சாகத்தையும், தன்நம்பிக்கையும் அளித்துள்ளது. இந்தியர் ஒவ்வொருவரும் ஹாக்கி அணிக்கான தங்களது ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு நல்ல செய்திகளை அளிப்போம். வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றுவோம் “ என கூறினார்.