மும்பை: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

BCCI.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் தொடா்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. அதற்கான அணி விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வீடியோ கான்பிரன்சிங் முறையில் கூடிய தேர்வுக்குழு, சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
டி20 தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் வருண் சக்கரவர்த்தியும் தேர்வாகி உள்ளார். ரோகித் சர்மா இடம் பெறாததால், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி 20 அணி வீரர்கள் விவரம் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி.
ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி விவரம்: அணி இந்தியா ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர்.
டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட்(விக்கெட்- கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், முகமது சிராஜ்.
கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பரெல் மற்றும் டி. நடராஜன் ஆகியோர் 4 கூடுதல் பந்து வீச்சாளர்களாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  காயம் அடைந்துள்ள ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும் பிசிசிஐ தேர்வுக்குழு கூறி உள்ளது.