Random image

என்னை சிறந்த கேப்டனாக்கியவர்கள் அணியினர்: அஜின்கியா ரஹானே

பிரிஸ்பேன்: அணியில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்த காரணத்தால், நான் சிறந்த கேப்டனாக தெரிகிறேன் என்றுள்ளார் அஜின்கியா ரஹானே.

இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாக செயல்பட்ட ரஹானே கூறியுள்ளதாவது, “தேசிய அணியை வழிநடத்துவது ஒரு பெரிய கெளரவம். இது என்னைப் பற்றியதல்ல; ஒட்டுமொத்த அணியைப் பற்றியது. ஒவ்வொருவருமே தங்களின் பணியை செய்தார்கள்.

களத்தில் போராடுவது என்பதுதான் அடிப்ப‍டையே. அடிலெய்டு போட்டிக்குப் பிறகு சூழல் கடினமாக மாறியது உண்மைதான். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் போராடுவது முக்கியம். நாங்கள் போட்டியின் முடிவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம்.

இந்த வெற்றியை நாங்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும். இந்தியா திரும்பியதும் இங்கிலாந்து தொடரைப் பற்றி சிந்திப்போம்” என்றுள்ளார் ரஹானே.