டில்லி கலவரத்தில் கணவனை இழந்த 20 வயது கர்ப்பிணிப் பெண் : கண்ணீர்க் கதை

டில்லி

டில்லியில் நடந்து வரும் கலவரங்களில் சுமார் 11 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

டில்லி மாநகர் வட கிழக்குப் பகுதியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.   இந்த சட்டத்தை எதிர்ப்போரும், ஆதரிப்போரும் ஒருவரை ஒருவர் மூன்று நாட்களாகத் தாக்கிக் கொள்வதால் டில்லி நகர் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளது.   இந்த வன்முறையில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஹாகித் என்பவரும் ஒருவர் ஆவார்.  உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான ஷாசியா என்னும் பெண்ணுடன் இவருக்குச் சமீபத்தில் திருமணம் ஆனது.  நான்கு மாதங்களுக்கு முன்பு ஷாசியா ஏராளமான கனவுகளுடன் புது மணப்பெண்ணாக டில்லிக்குக் குடி வந்தார்.  தற்போது அவர் இரு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்கு ஷாகித் தனது வீட்டுக்கு வருவது வழக்கமாகும்.   அவர் வீட்டுக்கு வருவதற்கு  முக்கிய காரணம் அவர் வந்த பிறகே ஷாசியா உணவு உண்ணும் வழக்கம் உடையவர் என்பதாகும்.   அவர் தனது மனைவியிடம் நேரத்துக்குச் சாப்பிடாவிட்டால் உனது குழந்தை பசியால் வாடும் எனப் பல முறை கூறியும் ஷாசியா கணவர் வந்த பிறகே உணவு சாப்பிடுவார்.

சென்ற திங்கள் கிழமை அன்று வீட்டுக்கு வரும் வழியில் நடந்த வன்முறையில் ஷாகித் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் உயிர் இழந்தார்.  இந்த தகவல் அறிந்த ஷாஜியா கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.   கடந்த ஞாயிறு அன்று அதாவது இறப்பதற்கு முதல் நாள் ஷாகித் தனது மனைவிக்கு வளையல்கள் வாங்கி பரிசளித்துள்ளார்.

அதைக் கையில் பிடித்த ப் அடி உண்ணாமல் அழும் ஷாகியாவின் துக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை விடப் பெரிய கொடுமை தனது கணவரின் சடலத்தை அவர் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில் நடந்த கலவரத்தால் ஷாசியாவின் மைத்துனர் இர்ஃபான் அவரை புர்கா அணியாமல் அழைத்து வந்ததே ஆகும்.

தனது மைத்துனரின் முகத்தைக் கூட தாம் பார்த்தது இல்லை எனவும் இந்த கலவரத்தால் தாம் இஸ்லாமியப் பெண் என்பது தெரியாமல் இருக்க துர்காவைக் கழற்ற நேரிட்டதாகவும் ஷாகியா கதறியபடி தெரிவித்துள்ளார்.   ஷாகியாவின் மைத்துனர் இர்ஃபான் தனது சகோதரர் ஷாகித் அமைதியானவர் எனவும் எவ்வித போராட்டத்திலும் கலந்துக் கொள்ளாதவர் எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி பிரிண்ட்