புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1ஆம் தேதி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னணி நடிகர் நடித்த திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015அம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது த்ரிஷ்யம்’ திரைப்படம் .

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லால், மீனா உள்பட கிட்டத்தட்ட ’திரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இதிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’திரிஷ்யம் 2’ படத்தின் டீஸர் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.