‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் புதிய அப்டேட்…

--

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

இந்நிலையில் புதிய போஸ்டர் உடன், டீஸர் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!

இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக வெளியான இரண்டாம் லுக் போஸ்டரில் ஜனவரி 7-ஆம் தேதி இத்திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் டீஸர் வெளியிடப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.