வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு குறைவான வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மென்பொருள் நிறுவனங்கள் குறைந்த அளவிலான பொறியாளர்களுக்கு மட்டும் வேலை வழங்க முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு 50 ஆயிரம் பேரை மட்டுமே பணியமர்த்த முன்வந்துள்ளது.

jobs

மென்பொருள் தொழில்நுட்ப துறையில் 7-9 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதால் ஐ.டி.நிறுவனங்களில் குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப துறையின் மூத்த அதிகாரியான ஒருவர் கூறுகையில் “ இந்த ஆண்டு மட்டும் 2.50 லட்சம் ஊழியர்களுக்கு பணி வழங்க உள்ளது. இதில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. அவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பணியில் நீட்டிக்கப்படுவார்கள். வேலையில் முன் அனுபவம் இருப்பவர்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறார்கள் “ என்று கூறினார்.

உதாரணமாக முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் உள்ளிட்டவைகள் கடந்த 4 ஆண்டுகளில் பணியாட்கள் நியமனத்தை 86 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. ஊழியர்களை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்வது டிசிஎஸ் நிறுவனத்தின் உயர்ந்த குறிக்கோள் என்று அதன் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் டிசிஎஸ் நிறுவனம் 20,000 மாணவர்கள் தேர்வு செய்தது. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த அளவிலான மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய தொழில்த்துறை நிறுவனங்கள் ஆட்சேர்பு நடவடிக்கையை எச்சரிக்கையுடன் நடத்தி வருகின்றன. புதிய தொழில்துறை நிறுவனங்களும் ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கையை துரிதமாக செய்து வருகின்றன. இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.

தற்போது உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழில்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளன. இந்த ஆண்டு சராசரியாக 7-10 சதவிகிதம் வரை வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது. இது கல்லூரியை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர இருக்கும் பொறியாளர்களுக்கும், ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்க கூடியது.