முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘800’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பதிவுகளை வெளியிட்டு இருந்தார் ராதிகா சரத்குமார்.
இதனிடையே, ‘800’ படத்தில் சிறுவயது முத்தையா முரளிதரனாக நடிக்க டி.ஜே.வை அணுகியது படக்குழு.
தனது தாய் ஈழத் தமிழர் என்பதால், அங்கு நடந்த விஷயங்கள் என்னைப் பாதித்துள்ளதாகவும் ஆகையால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் டி.ஜே.
தனது தாய் ஈழத் தமிழர்க்கு அங்கு நடந்த விஷயங்கள் என்னைப் பாதித்துள்ளதாகவும் ஆகையால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் டி.ஜே.