உ.பி. மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரம் – ஐசியு பிரிவில் இருந்த இளம்பெண் மீது பாலியல் வன்கொடுமை

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஐசியு பிரிவில் வைத்து 4பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

icu

உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில்(ஐசியு) அனுமதிக்கப்பட்டார்.

இரவில் தனியாக ஐசியுவில் இருந்த அந்த பெண்ணை மருத்துவ ஊழியர் சுனில் ஷர்மா மற்றும் 3பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம்பெண் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.