விவாகரத்து குறித்து லாலு மகன் தேஜ் பிரதாப் விளக்கம்

--

பாட்னா

னது விவாகரத்து குறித்து லாலு பிரசாத் மகன் தேஜ் ப்ரதாப் விளக்கம் அளித்துள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் மகன் தேஜ் பிரதாப் மற்றும் முன்னாள் பீகார் முதல்வரின் பேத்தியும் ராஷ்டிரிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரிகா ராய் மகளுமான ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணம் அப்போது வெகுவாக பேசப்பட்டது. ஆனால் தேஜ் பிரதாப் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்தி கடும் பரபரபை உண்டாக்கியது.

ராஞ்சி சிறையில் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது லாலு சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் காண நேற்று தேஜ் பிரதாப் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் தேஜ், “நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் ஐஸ்வர்யா மிராண்டா அவுஸில் படித்த எம் பி ஏ பட்டதாரி. அவர் நகர வாழ்க்கை வாழ்ந்தவர். எங்கள் இருவருக்கும் இடையில் எத பொருத்தமும் இல்லை.

நான் பிரம்மச்சாரியாகவே வாழ விரும்பினேன். என் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்தேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதை என் குடுமத்தினர் அறிந்துள்ளனர். எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் அடிக்கடி சச்சரவு நடக்கும்.

அப்போது ஐஸ்வர்யா தான் விவாகரத்து யோசனையை கூறினார். நானும் இந்த சச்சரவான குடும்ப வாழ்க்கையை விரும்பவில்லை. அதனால் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தேன். இனி இந்த முடிவில் இருந்து நான் மாற மாட்டேன்” என தெரிவித்தார்.

நேற்று முழுவதும் லாலுவின் குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரும் லாலுவின் மனைவி ராப்ரி தேவியுடன் இணைந்து சமரசப் பேச்சுக்களை நடத்தி உள்ளனர். ஆயினும் தேஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே சமரசத்துக்கு உடனபடவில்லை என தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேற்றுமை இருந்த்தால் பல நாட்களாக பேசிக் கொள்வது கூட கிடையாது என கூறப்படுகிறது.

தேஜ் பிரதாப் யாதவ் தம்பியும் பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் இது குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அத்துடன் இது தங்கள் குடும்ப விவகாரம் எனவும் இதை பத்திரிகை செய்தியாக்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.