பாட்னா

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிவடைந்துள்ளது.   இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியும் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன.

தேர்தலுக்கு  பிந்தைய கருத்துக் கணிப்பில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகி உள்ளன.   இதனால் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே மிகவும் அதிகரித்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில், “நாளை நவம்பர் 10 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் முடிவுகள் எதுவாக இருப்பினும் அமைதி காக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற நேர்ந்தால் வண்ணங்களைப் பூசுவது, பட்டாசு வெடிப்பது, வானத்தை நோக்கிச் சுடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது.   நமது வெற்றியைக் கொண்டாடும் போது ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது” எனப் பதிந்துள்ளார்.