தெலுங்கானாவில் 3 டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு….

--

ஹைதராபாத்:

கொரோனா பாதிப்புக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நிஜாமாபாத் நகரத் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ பிகலா கணேஷ் குப்தாவும் நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்பு ஜங்கான் எம்.எல்.ஏ., முத்திரெடி யாதக்ரி ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலுக்காக அவரது இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிஜாமாபாத் கிராமப்புற தொகுதிக்கான எம்.எல்.ஏ., பஜிரெட்டி கோவர்தன் நாவலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா பாதிப்புக்குள்ளான எம்.எல்.ஏ. களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கேற்ப சோதனைகள் நடத்தப்படும் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.