தமிழகஅரசு கவனத்திற்கு: ஆந்திரா தெலுங்கானாவில் 16ந்தேதி வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!

ஐதராபாத்:

ந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நாளை வரை (16ந்தேதி) வரை நெடுஞ் சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நமது அண்டைய மாநிலங்களைப்போல தமிழக அரசும் இதுபோன்ற பண்டிகை தினங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்து செய்தால், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும்.. மக்களும் மகிழ்ச்சி அடைவர்.  தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் இருந்து வெளியூர்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சங்கராந்திக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் நலனை கருதி   13ந்தேதி முதல்  16-ம் தேதி சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும்,  ஐதராபாத்-விஜயவாடா, ஐதராபாத்-வாரங்கல் மற்றும் பிற நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணமின்றி வாகனங்களை இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்குமாறு மாநில அரசுகள் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி மாநில அரசு 2ஆயிரம் சிறப்புகளை இயக்கி வருவதாகவும், ரயில்வே துறையும் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப் படுத்தும் வகையில் பல சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் வசித்து வரும் வெவ்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தடுக்கும் வகையிலும், பண்டிகையையொட்டி  ஊருக்குச் செல்பவர்களுக்கு செலவைக் குறைக்கும் என்றும், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கால விரையத்தை தடுக்கும் வகையிலும் சுங்கக்கட்டணம் 3 நாட்க ளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசும் இதுபோல சில நாட்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்தால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.. மக்களும் தமிழக அரசை வாழ்த்துவார்கள்… அரசு கவனிக்குமா?

You may have missed