தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலங்கானா:

தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் அச்சுறுத்தலையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் 2 வாரங்களுக்கு மட்டுமே ஊரடங்கை நீட்டிக்க பரிசீலனை என முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது

You may have missed