டில்லி: பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

டில்லி:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரதமர மோடியை இன்று சந்தித்து பேசினார்.

டில்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது மாநில விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் சந்திரசேகர் ராவ் மனு அளித்தார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பாஜகவுடன் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியை அவர் மீண்டும் சந்தித்துள்ளார். இதனால் மாநிலத்துக்கு ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.