முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்:
தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு தற்போது நான்காம் கட்டமாக மே 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 34 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.