ஹைதரபாத்:
த்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு, காங்கிரஸ் கட்சி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவால் விடுத்துள்ளது.

இதைப்பற்றி அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா தலைவரான மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி தெலங்கானாவின் ஆளும் கட்சி, பாஜகவிற்க்கு நண்பர்கள் இல்லை என்பதை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இடையில் மறைமுக புரிதல் இருக்கிறது, இந்த இரண்டு கட்சிகளும் எதிரானவர்கள் என்று மக்களுக்கு காண்பிக்க விரும்பினாலும், உண்மையில் அவர்கள் நட்பு கட்சி களாகவே உள்ளனர். மேலும் பண மதிப்பிழப்பு, முத்தலாக் மசோதா, பொருட்கள் மற்றும் சேவை வரி ஆகிய பாஜகவின் அனைத்து துவக்கத்திற்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரித்துள்ளது, அப்படி அவர்கள் நட்பு கட்சி இல்லை என்றால் விவசாயம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நிரூபிக்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து, நேற்று மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக கையெழுத்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர், இந்த பிரச்சாரத்தின் மூலமாக அடுத்த ஒரு மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளின் விவசாய மசோதாவிற்கு எதிரான கையெழுத்துக்களை வாங்கி அதனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்து, விவசாய மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.