தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா: 700ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. நாட்கள் நகர, நகர தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

தெலுங்கானாவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 91,361 ஆக உள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழக்க, ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 693 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 1,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 68,126  ஆக உயர்ந்துள்ளது. 22,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.