ஐதராபாத் என்கவுண்டர்: 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத்:

பெண் டாக்டர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக  கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அவர்களது உடல்களை மறுகூறாய்வு செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பெண்மருத்துவர் பிரியங்கா ரெட்டி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய  லாரி டிரைவர்களான  முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் இந்த அதிரடிக்கு  பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சில மனித உரிமை ஆர்வலர்களின்  எதிர்ப்பு காரணமாக உச்சநீதி மன்றம் மற்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையின ரால்,  சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.