தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆவணக் கொலை – சொந்த மகளை எரித்து கொன்ற தந்தை கைது!

தெலுங்கானாவில் வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மகளை, பெற்றோரே எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anuradha

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள தலமடுகு கிரத்தை சேர்ந்தவர் சத்தேனா – லட்சுமி தம்பதியினர். இவர்களது மகள் அனுரதா அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். லட்சுமணன் வேறு சாதி ( தலித்) என்பதால் அனுராதாவின் பெற்றோர் இவர்களது கதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி அனுராதா கடந்த 3ம் தேதி ஹைதராபாத்தில் லட்சுமணனை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணத்தால் ஆத்திரமடைந்த அனுராதாவின் பெற்றோர் லட்சுமணன் வீட்டை சூறையாடியதுடன் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து சொந்த கிராமத்திற்கு திரும்பிய அனுராதாவை அவரது தந்தையும், சகோதர்களும் அடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அனுராதா கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது உடலை சாக்குப்பையில் எடுத்து சென்று வயலில் வைத்து எரித்து விட்டு சாம்பலை ஆற்றில் கலந்து விட்டதாக கூறப்படுகிறாது. இது தொடர்பாக லட்சுமணன் அளித்த புகரை தொடர்ந்து அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டனர்.

இதுமட்டுமின்றி, காதலித்து வந்த தங்களுக்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கொலை மிரட்டல் விடுவதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தன் பெற்றோர் தான் காரணம் என அனுராதா ஏற்கெனவே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அனுராதாவின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

வேறு ஒரு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் தன் மகளையே பெற்றோர் எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த பிரணய் என்ற நபர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.