Random image

தெலுங்கானா மாநில ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் ஒப்புதல்

தெலுங்கானா மாநில ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநரின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதல் கடித்தத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

telanagana

லோக் சபா தேர்தலுக்கு முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் விதமாக, ஆட்சியை கலைக்க தெலுங்கானா முதல்வர் சந்திதசேர்கர ராவ் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சரவையும் ஆட்சியைக் கலைக்க பரிந்துரை செய்தது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை இன்று ஆளுநர் நரசிம்மனை சந்தித்து சந்திரசேகர ராவ் சமர்ப்பித்தார். அவரும் இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுக் கொண்டு, ஆட்சியைக் கலைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியல் இட்டார் ராவ். தெலுங்கானா விவசாயிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளதால் சந்திரசேகர ராவ் விவசாயிகள் பார்வைக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவே தெரிகின்றார். மேலும், தேர்தலை மக்களவை தேர்தலுடன் நடத்தப் போவதில்லை என்ற முடிவுடனும் ராவ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானாவுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது சந்திரசேகர ராவின் விருப்பமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளது. மக்களவையுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் போது, காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தப்படும் பட்சத்தில் தெலுங்கானாவின் ராஷ்டிரிய சமிதியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பது ராவின் கணக்காக உள்ளது.

தெலுங்கானாவில் பாஜக குறிப்பிடும் அளவிற்கு இல்லாததால், ராஷ்டிரிய சமிதிக்கு போட்டியாக களத்தில் இருக்கப் போவது காங்கிரஸ் தான். எனவே தேர்தலின் போது, ஓட்டுக்கள் சிதறக் கூடாது என்பதில் ராவ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரசேகர ராவுக்கு அதிர்ஷ்ட எண் 6 என்றும், இன்று தேதி 6 என்பதால் அவருக்கு சாதகமாக ஆட்சி கலைக்க ஆளுநர் பரிந்துரை செய்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.