அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடிக்குள் நிழைந்த இருவர் திருட முயற்சித்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

Florida

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் இன்று காலை 8.30 மணியளவில் நுழைந்த இருவர் திருட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தடுக்க அவர்கள் இருவரும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதில் அங்கன்வாடியில் பணிபுரிந்த கோவர்தன ரெட்டி என்பரை துப்பாக்கியால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் உயிரிழந்த கோவர்தன் தெலுங்கானா மாநிலம் யாததிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு 7 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். 50 வயதுடைய கோவர்தன ரெட்டி 7 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கோவர்தன் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அங்குள்ள தெலுங்கு தேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.