தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்றுக்கு பாதிப்பு.

ஹைதராபாத்:
மிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஜூன் 2ம் தேதி தெலுங்கானா உருவான தினம் என்பதால் அந்த நிகழ்ச்சியிலும் அவருடைய தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சென்ற கிராமத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் யார் யாரெல்லாம் எம்எல்ஏ வுடன் இருந்தார்கள் என்பதை போட்டோ வீடியோக்கள் மூலம் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் உதவியாளரும் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராமி ரெட்டி யாதத்ரி புவனகிரி கலெக்டர் அனிதா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ பி வெங்கட்ராமி ரெட்டி மற்றும் யாதத்ரி புவனகிரி மாவட்ட ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

கிரேட்டர் ஹைதராபாத் மேயர் “போந்து ராம்மோகன்” வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து சோதனை செய்து கொண்டார்.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மேயர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மேயர் தேநீர் அருந்திய ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவர் கொரோனா தொற்று பரிசோதித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.