தெலுங்கானா, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: 7ந்தேதி வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான், தெலுங் கானா மாநில சட்டசபைகளுக்கு வரும் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக கட்சித்தலைவர்கள் கடைசிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கான மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலை தேரதல்  கமிஷன் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த நிலையில், 4 மாநிலங்க ளுக்கு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் ஆகியவற்றில் கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்த நிலையில், 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான்,119 தொகுதிகளை கொண்ட , தெலுங் கானா  ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 7-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று  மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

7-ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவை யெட்டி,  2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடிகளில்  போலீசார் குவிக்கப்படுகின்றனர். மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை  வருகிற 11-ந் தேதி நடைபெற  உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.