சட்டசபை கலைப்பு?: ஆளுநரை சந்தித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

ஐதராபாத்:
முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில சட்டமன்றத்தை கலைக்க கோரி தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகரராவ் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார்.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். அதுகுறித்து ஏற்கனவே பலமுறை கூறி வந்த நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி இன்று மதியம் 1 மணி அளவில் தெலங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டமன்றம் கலைப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அனைவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்றுக்கொண்ட முதல்வர் சந்திரசேகரராவ் சுமார் 2 மணி அளவில் மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து கடிதம் கொடுத்தார்.
இதன் காரணமாக தெலங்கானா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகிறது.