ஐதராபாத்: லண்டனில் நடைபெற்ற மனதிறன் விளையாட்டில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் நீலகந்த பானு பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார்.

மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் எனப்படும் மனதிறன் விளையாட்டுகளுக்கான போட்டி லண்டனில், கடந்த 1997ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில், உலகெங்கிலும் இளையோர் முதல் பெரியோர் வரை கலந்துகொள்வது வழக்கம்.

இந்தாண்டு நடைபெற்ற போட்டியில், மொத்தம் 13 நாடுகளிலிருந்து 29 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் தெலுங்கானாவின் பானு பிரகாஷும் ஒருவர்.

பல கடினமான சுற்றுக்களைக் கடந்து, நீலகந்த பானு பிரகாஷ் இறுதி சுற்றில் 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.